தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டியில் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் உத்தரவின் படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுறுத்துலன் படி பழனியப்பா வித்யாலயா பள்ளி வளாகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 நடைபெற உள்ளதையடுத்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையர்களுக்கான பயிற்சி முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ தலைமையில் நடத்தப்பட்டது . இந்த முகாமில் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்த வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட்டது.