இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் விழா
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், இஸ்லாமிய அறிஞரும்,இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள் விழா கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கரும்பு கடை பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..
தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீஃப் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் தாவூத் அலி தலைமை தாங்கினார் முதன்மை துணைத் தலைவர் அண்ணன் ஷேக் சாபு முன்னிலை வகித்தார்..
நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,இந்தியாவில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களை தோற்றுவித்து,இந்தியாவின் இன்றைய முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்கிய அவரது பெருமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் அகமது கான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீர் அப்பாஸ் மற்றும் அசார் இம்மானுவேல் அசாருதீன் இஷாத் சுல்தான் பாபு ராஜ்குமார் முகமது பாசில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..