இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்
தமிழக அரசு சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா
துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி
அ . ஹேமந்த்ரா அவர்கள். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 14 வரை மாநில அளவில் நடத்தப்பட்ட பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 364 ஸ்கோர் பெற்று 95 பேரில் 2 வதாகவும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் பிரிவில் 364 ஸ்கோர் பெற்று 65 பேரில் 2 வதாகவும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் யூத் விமன் பிரிவில் 364 ஸ்கோர் பெற்று 72 பேரில் 2 வதாகவும்
சிறப்பாக புள்ளிகள் பெற்று தமிழக அளவில் மூன்று வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார்.தமிழ் நாடு சூட்டிங் அசோசியேஷன் நடத்திய இப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவி அ . ஹேமந்த்ரா அவர்களை பாராட்டி தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க.ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
கூடுதலாக 27 வது ஆல் இந்தியா குமார் சுரேந்தர் சிங் பள்ளி அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை இவர் வென்றுள்ளார்.
மாணவி ஹேமந்த்ரா அவர்கள் 13 வயதில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வம் காட்டி பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதங்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது இன்னும் வர இருக்கும் நேஷனல் மற்றும் இண்டர் நேஷனல் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாடி தங்கம் வெல்வதே இவருடைய இலக்காக உள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி ஹேமந்த்ரா அவர்களை இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலாளர் டாக்டர். சரஸ்வதி கண்ணையன் அவர்களும் நிர்வாக செயலாளர் டாக்டர்.பிரியா சதீஷ்பிரபு அவர்களும் பள்ளியின் முதல்வர் திருமதி. ஆ .செண்பகவல்லி அவர்களும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டினர்.