பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹமது ரபி அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்….
டெல்லியின் வரலாற்றுச் சின்னமான செங்கோட்டைக்கு அருகே நேற்று நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பில் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியையும் கடும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
மனித உயிர்களைப் பலிகொண்டு அச்சத்தை விதைக்கும் இந்தப் பயங்கரவாத செயல், அமைதிக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரானது.
செங்கோட்டை என்பது இந்தியாவின் வரலாற்றுப் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமாகும். அந்த இடத்திலே இதுபோன்ற பயங்கரவாத செயல் நடப்பது, நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் கேடுகெட்ட செயலாகும் .
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.
இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையாக, வன்முறையையும் அச்சத்தையும் வென்று, அமைதி மற்றும் மனிதாபிமானம் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப அயராது பாடுபட உறுதியெடுப்போம். சமாதானமே சுக வாழ்வு