பேராவூரணி, ஏப் 10-
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி வரவேற்றார்.

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் அத்யக்ஷர் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். மேலும் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், நாசர், உதயகுமார், சிங்கபாண்டியன், குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிஷாபேகம், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுரேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *