ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
பெரம்பலூர் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சியினரோடுவாக்கு சேகரிப்பு.
பெரம்பலூர். ஏப்.10. பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சியினரோடு கடந்த சில நாட்களாக வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், வேட்பாளர் தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யலூர் குடிக்காடு, விழாமுத்தூர், நெச்சியம், செல்லியம் பாளையம், புது நடுவர், மேட்டூர், வெள்ளனூர், ரெங்கநாதபுரம், தம்பிரான் பட்டி, கீழ கணவாய் போன்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
வாக்காளர்களிடம் பேசும்போது ஏற்கனவே 10 ஆண்டுகள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 75 ஆண்டு கால விவசாயிகளின் கனவு திட்டமான விசுவக்குடி அணைக்கட்டு திட்டத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும், மாணவிகள் பயன் பெறும் வகையில் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியை கொண்டு வந்ததாகவும், ஐந்து மாடியில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கொண்டு வந்ததாகவும், ஐயா எடப்பாடி யார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என்றும்
இன்னும், எண்ணற்ற சாதனைகளை வெற்றி பெற்ற பிறகு செயல்படுத்துவேன் என்றும், அதனால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ். மாவட்ட வழக்கறிஞர் துணைச் செயலாளர் கதிர் கனகராஜ், லாடபுரம் கருணாநிதி உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.