கோவை
தங்கத்தை திருப்பிக் தந்த தங்கம் !
கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார். சாய்பாபா காலனி பகுதியில் 69 வது வார்டில், வழக்கம்போல் சக்திவேலும் அவரது நண்பர் மணிகண்டன் இருவரும் பணிக்குச் சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வந்திருக்கின்றனர்.
அப்பொழுது மூதாட்டி ஒருவர் குப்பைகளை ஒரு பையில் போட்டு கொண்டு வந்து சக்திவேலிடம் கொடுத்தார். அப்பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு தரம் பிரிக்க முற்பட்ட பொழுது, அதில் பை ஒன்றில் தங்க சங்கிலி இருந்ததனை பார்த்தார். உடனே அந்த மூதாட்டி அழைத்து அந்த தங்க சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மூன்றரை சவரன் மதிப்புள்ள அந்த தங்கச் சங்கிலி சுப காரியத்திற்காக வாங்கி வைத்துள்ளனர்.
இதனை தூய்மை பணியாளர் சக்திவேல் உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்த பொழுது மிகுந்த நன்றி உணர்வோடு அதனை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த சக்திவேல் பணியாற்றி வரும் சீனிவாசா பெஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெங்கடேஷ், ஒப்பந்த பணியாளர் சக்திவேல் அவர்களை அடித்து கால்வை அணிவித்து மரியாதை செய்வதோடு, ரொக்க பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தூய்மை பணியாளர் சக்திவேல் அவர்களை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். தான் செய்யும் வேலைக்கு நிறுவனம் ஊதியம் தருவதாகவும், அடுத்தவர்கள் புடவைகளுக்கு நாம் ஆசைப்படுதல் கூடாது என்று சக்திவேல் தெரிவித்தார். பணியாற்றி வரும் நிறுவனத்தில் இருந்தும் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தரப்பிலும் தன்னை அழைத்து நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தது தனக்கு மன நிறைவை தருவதாக தெரிவித்தார்.