கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சருமான கே.விக்னேசை வால்பாறை தவெகவின் நகர இணைச்செயலாளர் செய்யது அலி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் வால்பாறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தோட்டத் தொழிலாளர்களின் மருத்துவ சேவையை உறுதி செய்யவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இ- பாஸ் முறையை செய்யவும் வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கும் நன்றி தெரிவித்தனர் மேலும் நிர்வாகிகள் அளித்த மனுவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியமுறையில் பரிசீலனை செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *