தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அனுமதியின்றி சோலார் மின் கம்பங்கள் அமைப்பு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு.

தாராபுரம்,

திருப்பூர்மாவட்டம்தாராபுரம்வட்டம்நந்தவனம்பாளையம், சடையபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட நீரோடை புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி தனியார் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மானூர்பாளையம், தொட்டியதுறை, கள்ளி வலசு, உடைநாரிபாளையம், நாவி தன்புதூர், நிறை யூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகள், நீரோடைகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் மயான பகுதிகளை சேதப்படுத் துவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து ஆதித்தமிழர் முன் னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காளி முத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் விவேகானந்தம் மற்றும் சந்துரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வட்டாட் சியரிடம் மனு அளித்துள்ளார்.

மேலும், அனுமதியின்றி மின் கம்பங்கள் அமைப்பதால் மழைக்காலங்களில் பெரும் அபாயம் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது.

இந்த மனுவை பெற்ற காவல்துறையினர், தேர்தல் காலம் காரணமாக புகார் பெட்டியில் மனுவை இடுமாறு அறிவித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *