கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் 12 வது வார்டுக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் மயில் கணேசன், துணைச்செயலாளர் பொன் கணேசன், பாஜக நிர்வாகிகள் கே.எம்.தங்கவேல், எஸ்.செந்தில் முருகன், எம்.ஆர்.கே.பாலாஜி,அமமுக தொழிற்சங்க மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி, நகரச்செயலாளர் நெல்லை செல்வன், அதிமுக நிர்வாகிகள் எம்.ஆர்.எஸ்.மோகன், எஸ்.கே.எஸ்.பாலு, கருமலை சௌந்தரராஜன், கருமலை விமலா மற்றும் அதிமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்