கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் என் டி ஏ கூட்டணியின் குளித்தலை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அன்புமணியின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ். கருணாகரனை ஆதரித்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார்.
பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.பின்னர் பாமக பிரேம்நாத் கூறுகையில் இங்கு சாலை, குடிநீர் என பல வசதிகள் இல்லை கருணாகரன் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் உங்கள் தேவைகள் அனைத்தும் செய்து கொடுப்போம் என கூறினார்.சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற செய்வது உங்கள் பொறுப்பு என கூறினார்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.