முதுகுளத்தூர். ஏப் 14 அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமாரை ஆதரித்து தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை நரிப்பையூர்குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுவிட்டன பள்ளிகளில் கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளன படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை முதுகுளத்தூர் கமுதி சாயல்குடி நரிப்பையூரில் தொழிற்சாலைகள்தொடங்கப்படும். நரிப்பையூர் கடல் நீர் நன்னீராக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் பதவி கொடுத்தவருக்கே விசுவாசம் இல்லை தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்
பதவி அமர்த்தி 6 மாதத்தில் என்னை கட்சியை விட்டு நீக்கினார் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ராம்குமார் பாண்டியனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்துபல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்
நிருபர் ஆர் செந்தில்குமார்