கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்பு

ரெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் லீடர் படம் வெளியாகி பத்தாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது இதில் அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்ற மாநில தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்ற இதில், நிர்வாகிகள் ,மகளிர் தலைவி கலைவாணி மற்றும் பொறுப்பாளர்கள் ஜெயக்குமார்,யாகூப்,செந்தில் குமார்,டேவிட், சிவா,உட்பட ரசிகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த நடிகர் கூல் சுரேஷ் தனது வழக்கமான வித்தியாசமான ஸ்டைலில் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மாட்டுவண்டியை தானே இழுத்தபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த அவர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ்,“நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். ‘லீடர்’ படம் அதற்கு ஒரு உதாரணம். இப்படம் மேலும் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார் தொடர்ந்து அண்மையில் இணையதளத்தில் ஜனநாயகன் பட வெளியாக காரணமானவர்களை தேடி கண்டு பிடித்து தூக்கில் இட வேண்டும் என ஆவேசமாக கூறினார்..

யூடியுபர் வாட்டர்மிலான் திவாகர் பெண்களை இழிவு படுத்தி பேசியதை வன்மையாக கண்டிப்பதாக பேசிய கூல் சுரேஷ் திடீரென ஆவேசம் வந்தவராக தனது காலணிகளை கழட்டி காட்டியபடி திவாகரை செருப்பால் அடிப்பேன் என பகிரங்க மிரட்டல் விடுத்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *