கரூர் செய்தியாளர் மரியான் பாபு



கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகர தெற்கு பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர், ஜீவா நகர்,ஆதிதிராவிடர் காலனி,காமராஜர் நகர்,முத்தலாடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போதுகரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


வேட்பாளர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த உதவிகள், சாதனைகளை எடுத்துரைத்தார்.பின்புசாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும், 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க கூறி பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *