கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்
உக்கடம் ஜி.எம்.நகர் தளபதி அறிவகம் சார்பாக வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து பிரச்சாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி காங்கி்ரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு தளபதி அறிவகம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
ரியாசுதீன் தலைமையில் நடைபெற்ற இதில்,
சாரமேடு பகுதி கழகச் செயலாளர் ஷேக் அப்துல்லா, 84 வது வார்டு பொறுப்பாளர்கள் உமர் அப்துல்லா கோவை அபு, ஜாபர் அலி, ரஹ்மத்துல்லாஹ் ஆட்டோ அபுதாஹிர், புக் யாசர் கோவை சதாம்,நவ்ஃபல், ரியாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து அந்த பகுதிகளில் தி.மு.க.கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது..