தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள கம்பம் ரோடு சிப்பாலக்கோட்டை ரோடு கண்ணாடி கடை மூக்கு மார்க்கையன் கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல் ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெருத்தெருவாரியாக சென்று அங்கு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளராகிய எனக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்