ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்.

பெரம்பலூர். ஏப்.18 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தேசிய ஜனநாயக கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, நாயுடு பேரவை, ஆகிய கட்சியினரோடு சூறாவலியாக சுழன்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நகரச் செயலாளர் ராஜ பூபதி ஏற்பாட்டில் ஆலம்பாடி, வடக்கு மாதவி ரோடு, உழவர் சந்தை, ராம் தியேட்டர், காமராஜர் வளைவு, ரோஸ் நகர், ரோவர் ஆர்ச், புதிய பேருந்து நிலையம், கே ஜி எம் நகர், தீரன் நகர், ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் இளம்பை. தமிழ்செல்வனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது வாக்காளர்களிடன் பேசிய வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அன்பிற்குரிய வாக்காளர் பெருங்குடி மக்களே உங்களுடைய பொன்னான வாக்குகளை முத்தான வாக்குகளை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு ஓங்கி உயர்ந்து உங்கள் எதிர்புரம் நின்று கொண்டிருக்கிறது அரசு தலைமை மருத்துவமனை. புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்தில் புரட்சித்தலைவர் எடப்பாடியாருடைய ஆட்சிக் காலத்திலே இத்தொகுதி மக்கள் பல்வேறு சுகாதார வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக சேய் நல மருத்துவக் கட்டிடம்,MRI ஸ்கேன் வசதி கொண்டு வந்து இப்பகுதி மக்களுக்கு சுகாதார வசதியை ஏற்படுத்தி தந்தோம். மீண்டும் பல வளர்ச்சிப் பணிகளை கொண்டுவர உங்களுடைய பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக பிரச்சாரத்தில் கூறினார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் பேசினார். இம்முறையும் தன்னை தேர்ந்தெடுத்தால் உங்களுடைய குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன் என்றும், மேலும் ஐயா எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அவர் அறிவித்த அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகையும், அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், அனைவருக்கும் அம்மா இல்லம் இலவச வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும், நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்த வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் என்றும், அத்தனை நலத்திட்ட உதவிகளையும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *