கரூர் செய்தியாளர் மரியான் பாபு
15வது ஆண்டாக பரணிவித்யாலயா.. சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பில் அகில இந்திய பொதுத்தேர்வில் கரூர் சேலம் பைபாஸ் சாலையின் அருகே அமைந்துள்ள பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
ஏழு மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தொடர்ந்து 15வது ஆண்டாக பரணி வித்யாலயா பள்ளி நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சம்ருதி மற்றும் சரோரியா 484/500 மதிப்பெண் பெற்று பள்ளியில் முத்லிடம் பெற்றுள்ளார். தருணிகா 483/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், ஆதிரா 481/500 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும்,400 மதிப்பெண்களுக்கு மேல்129 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பில் இந்த ஆண்டு பள்ளியின் சராசரி மதிப்பெண் 403 ஆகும்.சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் மாணவர்களின் அபார வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன்,முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், இருபால் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார். பரணி முன்னாள் மாணவரும்,வருமான வரித்துறை டெபுடி கமிஷனருமான பிரபாவதி ஐ.ஆர்.எஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேர்வில் சிறப்பிடம் பிடித்த சாதனையாளர்களைப் பாராட்டினார்.
செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொன்னாடையும் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.