மேயர் ஜெகன் தலைமையில் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரிப்பு வீதி வீதியாக.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராம ஜெயம் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார் இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் 8 வார்டுகள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும் இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஒன்றாவது வார்டு. இரண்டாவது வார்டு. மூன்றாவது வார்டு. ஆகிய வார்டுகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் வேட்பாளர் ராம ஜெயத்திற்கு மேயர் ஜெகன் வீடு வீடாக தெருத்தெருவாக சென்று வாக்குகளை சேகரித்தார்
அப்போது 32 வருடமாக இந்தப் பகுதி எல்லாம் மழைக்காலத்தில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி இருந்தது தற்போது சாலை வசதிகள் நல்ல முறையில் அமைத்து தரப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது அதுபோல குடிநீர் மின்விளக்கு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது
என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பேசினார் ஆகையால் தொடர்ந்து திமுக வேட்பாளர் ராம ஜெயத்துக்கு மேயர் ஜெகன் வாக்கு சேகரித்தார் அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மேயர் ஜெகன் இடம் எங்களது வாக்கு திமுகவிற்கு தான் என்று பொதுமக்கள் மேயர் ஜெகன் இடம் உறுதி அளித்தனர்.
அதற்கு மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் அதிகாலை முதல் திமுக வேட்பாளர் ராம ஜெயத்திற்கு மாநகராட்சியில் உள்ள மூன்று வார்டுகளில் வீதி வீதியாக தெருத்தெருவாக மேயர் ஜெகன் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது