திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( இலவச ஓவியப் பயிற்சி, இந்தி, யோகா, கணினிப் பயிற்சி, திருக்குறள் வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி, சிலம்பம் உள்ளிட்டவை ) மைய வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் கலைச் சுடர்மணி பெ.பார்த்திபன் வரவேற்புரை ஆற்றினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சு.நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பங்கேற்று, கோடைகாலத்தில் மாணவர்கள் வெளியே வெயிலில் இருந்து பாதுகாக்க இது போன்ற பயிற்சி வகுப்புகள் வழிசெய்யும். இந்த பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு சிந்தனையை தூண்டும் வகையிலும், தன்னம்பிக்கை பயிற்சியையும் வழங்குகிறது. எனவே மாணவர்கள் தங்களை மீத்திறன் மிக்கவர்களாக மாற்றிக் கொள்ள இப்பயிற்சி வழி வகுக்கும். மேலும் பெற்றோர்களை மதித்து சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் ஜெயக்கண்ணு, ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஸ் மைய ஆசிரியர் கு.சதானந்தன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, மாணவன் சாய் வர்ஷன் நடத்திய மேஜிக் ஷோ நடைபெற்றது. மேலும் இலவச பயிற்சியில் கலந்து கொண்ட 75 மாணவர்களுக்கு இலவச கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.