கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல்

சென்னை மற்றும் டில்லிக்கு அடுத்ததாக, வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரில் தங்களது வணிக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக GHL India Ventures மற்றும் Jamin Properties இணைந்து புதிய அலுவலகத்தை டாடாபாத் பகுதியில் துவக்கியுள்ளது.
இதற்கான துவக்க விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி, கோயம்புத்தூர் கோவை நடிகர் சங்கத் தலைவர் ஸ்ரீமன் சுந்தரம், காருண்யா பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் கே.எஸ்.ஆர். கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், நலம் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரியதர்ஷினி, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் முரளிதரன், GMAC அசோசியேட்ஸ் தலைமை நிர்வாகி லயன் டாக்டர் விஸ்வநாதன், ஸ்டார் ஜெராக்ஸ் நிர்வாக இயக்குனர் ஜனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிறுவன நிர்வாகிகள் பேசுகையில், “சென்னை மற்றும் டில்லியில் பெற்றுள்ள வரவேற்பை தொடர்ந்து, கோவையில் எங்கள் சேவைகளை விரிவுபடுத்துவதில் பெருமை கொள்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரில் தரமான ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். முதலீட்டாளர்கள் மற்றும் வீடு தேடுபவர்களுக்கு நம்பகமான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது எங்கள் நோக்கம்” என தெரிவித்தனர்.

மேலும், கோவை நகரின் வளர்ச்சி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வு, கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *