கோவையில் யூடியூப் நடிகர் U MT ராஜாவுக்கு “குசும்புக்காரன்” விருது


கோயம்புத்தூரில் பல்வேறு யூடியூப் சேனல்களில் தனது தனித்துவமான நடிப்பால் பிரபலமான UMT ராஜாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சீசா சேனல், இஎம்ஐ சேனல், மீனாட்சி சில்க் சேனல் உள்ளிட்ட பல யூடியூப் தளங்களில் காமெடி மற்றும் அப்பா கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், இதுவரை கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார்.

அவரது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை வெளிப்பாடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில், காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக “கோயமுத்தூர் குசும்புக்காரன்” என்ற பட்டத்துடன் சிறந்த நடிகருக்கான விருது UMT ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை “சினிமா இன்டர்சிட்டி” நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.


கோவை யூடியூப் உலகில் தனது தனி முத்திரையை பதித்து வரும் UMT ராஜாவுக்கு இந்த விருது மேலும் ஒரு ஊக்கமாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *