மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல மாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது.


மதுரை சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.30-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று கொடியேற்றத்தை யொட்டி சுவாமி சந்நிதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அப்போது, மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் தனித் தனியாக வெள்ளி சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர்.

தங்கக் கொடிமரத்தில் கொடி யேற்றம் நடைபெற்றது.
கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. கொடிமரத்தின் மேலி ருந்துமலர்கள் தூவப்பட்டன. பின் னர், தீப, தூப ஆராதனை நடை பெற்றது நண்பகல் 12 மணியள வில் கொடி மரம் முன்பிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு, சுவாமி சந்நிதி 2-ம் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து கோயிலுக்குள் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினர்.


இவ்விழாவில் ஆட்சியர் பிர வீன்குமார், மாநகராட்சி ஆணை யர் சித்ரா, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணை யர் நா.சுரேஷ் மற்றும் அறங்காவ லர்கள் பங்கேற்றனர். நேற்றிரவு கற்பகவிருட்சவாகனத்தில் பிரியா விடை சுந்தரேஸ்வரர், சிம்ம வாக னத்தில் மீனாட்சி அம்மன்மாசிவீதி களில் எழுந்தருளினர். அப்போது, குழந்தைகள், சிறுவர்கள், சிறுமி கள் மீனாட்சி அம்மன் வேடமிட்டு வரவேற்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தின மும் காலை, இரவு இரு வேளை களும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் ஆகியோர் எழுந்தருளுகின்றனர்.

திருவிழாவின் 8-ம்நாள்(ஏப்.26) இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அன் றிலிருந்து ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறுவ தாக ஐதீகம். ஒன்பதாம் நாள் (ஏப் .27) திக்கு விஜயம், 10-ம் நாள் (ஏப்.28) திருக்கல்யாணம் நடை பெறும். 11-ம் நாள் தேரோட்டமும் 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்தவாரி யும் நடக்கிறது. அத்துடன் சித்திரைத்திருவிழா நிறைவு பெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *