நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், யு.எம்.டி. ராஜா என்பவர் கிணற்றுக்குள் தண்ணீருக்குள் பத்மாசன நிலையில் அமர்ந்து தீவிர விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை சரியாக 6:00 மணி அளவில் கிணற்றுக்குள் இறங்கிய அவர், தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக நீருக்குள் அசையாது அமர்ந்து, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதையும், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்பதையும் உணர்த்தும் வகையில் அவர் மேற்கொள்ளும் இந்த நூதன விழிப்புணர்வு முயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், அனைவரும் வாக்களிப்பதை ஒரு சபதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலுவாகப் பதிவு செய்து வருகிறது.