கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு சத்தம் கேட்டு தகவல் கொடுத்த பள்ளி மாணவி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குட்டி ஆடு ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததுகத்திவாக்கம் அரசினர் பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயிலிருந்து ஆட்டின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்ததை
பார்த்த 14 வயது மாணவி ஒருவர் கால் வாயில் பார்த்தபோது ஆடு தத்தளித்து கொண்டிருந்ததுஆட்டின் அபய குரலை பார்த்த மாணவி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் தீயணப்புத் துறையினர் கால்வாயில் இறங்கி தத்தளித்து கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்டனர் ஆட்டுக்குட்டியின் குரலைக் கேட்டு காப்பாற்றிய மாணவியை தீயணைப்புத் துறையினர் பாராட்டினர்