பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பேராவூரணி ஏப் 22.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றி, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அண்ண வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

திருவிழாவில் முக்கிய நாளான வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை அன்று அதிகாலை 4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளயுள்ளார். தொடர்ந்து 10ம் திருவிழாவாக தீர்த்தவாரியும், 11ம் திருவிழாவாக திருக்கல்யாணமும் இரவு தெப்ப உற்சவமும். 12ம் திருவிழாவாக விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இதில் கோயில் செயல் அலுவலர் அருண்பிரகாஷ், பரம்பரை அறங்காவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் அன்பழகன், சத்தியமூர்த்தி, குழந்தைசாமி, கணபதி, செழியன், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், திருக்கோவில் பணியாளர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் நீலகண்டன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *