கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்படி கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தப்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆண் பெண் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் மிக அமைதியாக வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையான தங்களின் வாக்குகளை செலுத்தினார்கள்.