தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வரும் வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் எஸ் டி கே ஜக்கையன் கள ஆய்வு செய்தார் உடன் உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய அண்ணா திமுக செயலாளர் பி.கல்யாணக் குமார் முல்லை சேகர் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்