கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுலா அதிகாரி ஜெகதீஸ்வரி தலைமையில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் குமரன் (பொறுப்பு), வட்டாட்சியர் அருள்முருகன், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், தமிழக அரசு தொழில்துறை மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பொள்ளாச்சி வர்த்தக சபை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை படகு இல்லம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது

பின்னர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் பழுதடைந்துள்ள வால்பாறை பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவற்றை மறுசீரமைத்து நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என வால்பாறை சுற்றுலா வளர்ச்சி கூட்டு குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், 1970களில் இயங்கிய கேபிள்கார் திட்டம் பராமரிப்பு குறைவால் நிறுத்தப்பட்ட நிலையில் அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் வேண்டும் என்றும் 1968 காலங்களில் இயக்கப்பட்ட கேபிள்கார் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்” திரைப்படத்தில் (1968) ஆழியார் அணையிலிருந்து வில்லோனி பகுதி வரை இயக்கப்பட்ட கேபிள்கார் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த கேபிள்கார் மூலம் மக்கள் சென்று வரவும் பொருட்கள் கொண்டு செல்லவும் அதனால் கிடைத்த வருமானத்தில் இருந்து ரூ.7 லட்சம் தொகை இரண்டாம் உலகப் போரில் அரசுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது

என்றும் பதிவுகள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவித்தனர். இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அது வால்பாறை மக்களுக்கு மாற்றுப் போக்குவரத்து பாதையாகவும், சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாகவும் அமையும் என வால்பாறை சுற்றுலா குழுவினர் தெரிவித்தனர்.

அத்துடன் பாரம்பரிய சுற்றுலா திட்டங்களுக்கான தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், மலைப்பகுதி இயற்கை அழகை காக்கும் வகையில் திட்டம் உருவாக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், வால்பாறை மட்டுமன்றி ஆழியார், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளிலும் சுற்றுலா பொருளாதாரம் மேம்படும் என்று அதிகாரிகளும் தன்னார்வலர்களும் சிறுப்பு குழுவினருக்கு தெரிவித்த்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்க் கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *