கடலூர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் வேளாண்மை உழவர் நலத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், விளைநிலங்களின் பரப்புகளை அதிகரித்திடவும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக விற்று பயன்பெறும் வகையில் உழவர் சந்தைகள், தினசரி அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விவசாயிகளின் விளைப்பொருட்கள் நேரடியாக விற்பனை செய்து, அதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பெற்று பயனடைந்து வருகின்றனர்.

செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி
(மண் நலன் மற்றும் வளம்) திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய உரக்கட்டுபாடு ஆய்வகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உரக்கட்டுபாடு ஆய்வகம் அமைவதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெறப்படும் உர மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய பயன்படும். இந்த ஆய்வகம் மூலம் உரங்களை உடனடியாக பகுப்பாய்வு செய்து அறிக்கை வழங்கப்படும். பகுப்பாய்வு மேற்கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்வதை உறுதி செய்யப்படும். பெறப்படும் உர மாதிரிகளை ஆய்வு செய்து அதன் தரத்தில் குறைபாடு கண்டறியும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட உர நிறுவனத்தின் மீது தகுந்த மேல்நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மு.லெட்சுமிகாந்தன்,உதவி இயக்குநர் சு.சுரேஷ்,துறை சார்ந்த அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *