கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான ஹைப்பெக்(HIP EC) எனும் புதிய சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்
கோவையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் வகையில், பிரத்தியேக HIP EC (ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி) எனும் சிறப்பு கிளினிக் துவங்கப்பட்டது.
இதற்கான துவக்க விழாவில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி புதிய ஹைப்பெக் கிளினிக் மையத்தை துவக்கி வைத்தார் புற்றுநோயியில் துறை தலைவர் டாக்டர்.சிவநேசன் HIP EC திட்டத்தின் ஆலோசகர் மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.பிரவீன் ரவிசங்கரன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் ஆலோகர் மற்றும் ரோபோடிக் மற்றும் HIP EC அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.அருள்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்…
தொடர்ந்து புதிய ஹைபெக் சிகிச்சை முறை குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில்,இது வரை 25 HIPEC சிகிச்சைகள் வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளதால், ஜி.கே.என்.எம். மருத்துவமனை தமிழகத்தின் மேற்கு பகுதியில் HIPEC சிகிச்சைக்கான முன்னணி மருத்துவ மையங்களில் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தனர்..
இந்த புதிய மருத்துவ மையம், சிக்கலான வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும்,
குறிப்பாக .
HIP EC என்பது கருப்பை புற்றுநோய், குடல் கட்டிகள், பெருங்குடல் புற்றுநோய்கள், பெரிட்டோனியல் மீசோதெலியோமா, இரைப்பை புற்றுநோய்கள் மற்றும் சில அரிய பெரிட்டோனியல் வீரியம் மிக்க கட்டிகள் போன்ற வயிற்றுப் பகுதியில் ஆழமாக பரவியுள்ள புற்றுநோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறை என தெரிவித்தனர்..