V, செந்தில் குமார் செய்தியாளர் திருவாரூர்
வலங்கைமானில் டீ குடித்தபடியே வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் நன்றி தெரிவித்தார்.
வலங்கைமான், ஏப்.26- நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக இரா.காமராஜ் எம்எல்ஏ இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அதனை முன்னிட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகமாக நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 85.92 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி திருவாரூர் திரு.வி.க அரசினர் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
இந்நிலையில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ, வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் கொட்டையூரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திய சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து தொகுதிக்கு பெருமை சேர்த்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட்ட தமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சொல்லி வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.