சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை வளங்களை காக்கவும் தூய்மையான காற்று சுற்றுப்புற சூழலை வளப்படுத்தவும் நோய் நொடி இல்லாமல் தூய்மையான காற்றை சுவாசித்து வாழ்வதற்காக சென்னை பசுமை இயக்கம் மற்றும் திருவொற்றியூர் சாத்தாங்காடு காவல் நிலையம் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் எண்ணூர் காவல் உதவி ஆணையர் வெங்கடகுமார். சாத்தங்காடு காவல் நிலைய ஆய்வாளர் அமீர், சென்னை பசுமை இயக்க நிர்வாகிகள் என் துரைராஜ் குரு சுப்ரமணி, எம்.மதியழகன் ராஜ், குமார் உட்பட பலர் கலந்துகொண்டு பசுமை இயக்கம் மற்றும் திருவொற்றியூர் சாத்தங்காடு காவல் நிலையம் சார்பில் மரக்கன்றுகளை நட்டனர்