புவனகிரி ஜனவரி- 26
கடலூர் மாவட்டம், பு. முட்லூரில் அமைந்துள்ள அட்சயா மந்திரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜர் சமூக நலப் பேரவை, புவனகிரி மற்றும் அட்சயா மந்திரி மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய இவ்விழாவில், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அட்சயா மந்திரி கல்விக் குழுமத்தின் தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். காமராஜர் சமூக நலப் பேரவையின் தலைவர் மோகன்தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவரும் நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனூஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தமிழ் சான்றோர்களுக்கு காந்திய சிந்தனையாளர் கே.ஜி. குமார் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், வழக்கறிஞர் குணசேகரன், பின்னலூர் தலைமை ஆசிரியர் துரைமணி ராஜன், நல்லாசிரியர் தியாகராஜன், காமராஜர் சமூக நலப் பேரவை செயலாளர் தங்க. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *