தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் நாச்சியார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பாக கார்கில் போரின் 27-ஆம் ஆண்டு வெற்றி தினம் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நாச்சியார் கோவில் அண்ணா சிலை அருகில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீர்களுக்கு வெற்றி தின விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் என்.பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீர்களான மரிய கிரகோரி, முத்துராமலிங்கம் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் பேசுகையில், கார்கில் போரின் போது நமது வீர்கள் நிகழ்திய தியாகங்கள் குறித்து உருக்கமாகவும் விரிவாகவும் பேசினார்கள்.
.தொடர்ந்து லயன் சங்க செயலாளர் வி. சரவணன், பொருளாளர் ஹ. அய்யப்பன், வட்டார தலைவர் எள்.தங்கவேல், மாவட்ட தலைவர்கள், சங்க துணை தலைவர்கள்,முன்னாள் தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு வீரவணக்கம் முழக்கமிட்டு மலர் தூவி மெழுகுவத்தி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்..
விழாவின் சிறப்பு அம்சமாக சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 5 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீரத்திருமகன்* என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இதில் நாச்சியார் கோவில் காவல்துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்