திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ)ப. சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் வெ.துரைராஜன் ஆகியோருக்கு பணி நிறைவு விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீ.கவிதா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன்,
ஆசிரியர் பயிற்றுநர் பிரபு, ஆசிரியர்கள் ரேகா ,ரேவதி, தினேஷ், சத்துணவு பணியாளர்கள் சரளா, குணலட்சுமி, இலக்கியா, அம்பிகா, அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆசிரியர் இரா.செல்வகுமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.