கோவை பி.எஸ்.ஜி. சுகாதார அறிவியல் கல்லூரி நிறுவனங்களின் ஆராய்ச்சி தின விழா பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். முதல்வர் டி.எம். சுப்பாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி. ஆராய்ச்சி மற்றும் புதுமை இயக்குநர் சுதா ராமலிங்கம் நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ ஆணையங்களின் கூடுதல் இயக்குனர் சங்கமித்ரா பதி கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் மாணவர்களின் ஆராய்ச்சி முன்னேற்றங்கள், சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டதுடன், சிறந்த போஸ்டர் மற்றும் திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் ஆராய்ச்சி முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் மேற்கொண்ட புதிய கண்டுபிடிப்புகள் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த விழா மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *