சமூக சேவகர் ஆதவனுக்கு 13ஆவது முறை தேசிய விருது :-


பள்ளிப் பருவம் முதல் இன்று வரை தொடர்ந்து கடந்த 47 ஆண்டுகளாக இளைஞர் நலன், சமூகப்பணி, இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் புதுச்சேரி தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவரும், சமூக சேவைக்காக மத்திய அரசின் தேசிய விருதினை பிரதமரிடம் பெற்றவருமான ஆதவனின் உழைப்பையும், இளைஞர் நலன், உள்ளிட்ட நாட்டுப்பற்றையும் பாராட்டும் வகையில் புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு 13 வது முறையாக தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்கப்பட உள்ளது.

வரும் மே மாதம், 11ந் தேதி , புது டெல்லியில் உள்ள விஸ்வ யுவகேந்திரா எனும் சர்வதேச அளவிலான இளைஞர் மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய அளவில் நாட்டிற்கு உழைத்தவர்களையும், மக்களின் பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர்களையும், சிறப்பித்து போற்றி பாராட்டும் வகையில் இந்திய அளவில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு புதுச்சேரி சமூக சேவகர் ஆதவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..

13 வது முறையாக தேசிய விருதினை பெரும் ஒரே சமூக சேவகர் ஆதவன் என்பதும் இவர் புதுச்சேரி மண்ணைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றையும் இதன் மூலம் பெற்றுள்ளார். ஆதவன் ஏற்கனவே உலக அளவில் 3 முறை சர்வதேச அளவில் மூன்று விருதினையும், 60க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இதுவரை 43 நாடுகளுக்கு இந்தியாவின் சார்பில் பிரதிநிதியாக சென்று பங்கேற்று வந்தவர் இவர் ஒருவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவர் ஒரு சமூக சேவகர் என்பதோடு மட்டும் அல்லாமல், கவிஞர், பட்டி மன்ற பேச்சாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தாய் மொழி தமிழ் உள்ளிட்ட, இந்தி, ஆங்கிலம்,பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், போன்ற பல மொழிகளை பேசும், அரசு நிகழ்ச்சிகளில் மொழி பெயர்க்கும் ஆற்றல் மிக்க தமிழர் ஆதவன் என்பதும் இவரின் தனிச் சிறப்பாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *