பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத பதினெட்டாம் போர் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கூத்தாண்டவர் என்ற ஒரு நபரை உருவாக்கி அவர் கடைசி நாள் போர் சமயத்தில் அரவான் பலிகடா என்ற கதையின் பின்னணியில் கூத்தாண்டவர் தலை துண்டித்து பிறகுதான் மகாபாரத போர் முடிவுற்றதாக இன்றுவரை நம்பப்படுகிறது

அரவான் என்னும் கூத்தாண்டவர் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் அருகே வருடம் தோறும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது இதனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கிராமத்தில் பல ஆண்டுக்கு முன்னரிலிருந்து சுற்று வட்டார கிராமங்களான 27 கிராம மக்கள் ஒன்று திரண்டு கூத்தாண்டவர் என்னும் அரவான் கடவுளை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தி பசுந்தலை போர்த்திய பந்தலில் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை முன்வைத்து வணங்கி செல்கின்றனர்

இதனைத் தொடர்ந்து தாங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கோழிகள் பலி கொடுத்தும் அரவான் தலையில் ரூபாய் நோட்டுகளை வைத்தோம் பூமாலைகளை சுவாமி மேல் தூவி வணங்கி செல்கின்றனர் மேலும் இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *