அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஏ ஐ டி யு சி செயலாளர் டி தண்டபாணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் தேசிய நிர்வாக குழு ஜி சந்திரகுமார் சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர் தனசிங் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் மருதமுத்து சிவகுமார் முருகேஸ்வரி ராஜ்குமார் பாலமுருகன் அரியலூர் நகராட்சி நாகூராண் நல்லுசாமி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2D 62 இன் படி நிர்ணயம் செய்துள்ள அகவிலை படியுடன் சேர்ந்த ஊதியத்தை கூட அமலாக்காமல் உள்ளாட்சித் துறை நிர்வாகம் மறுத்து வரும் போக்கினை கைவிட வேண்டும் ஊதியத்தை உயர்த்தி சிறப்பு குடிநீர் ஓ எச் டி ஆப்பரேட்டர்களை பகுதி நேர தொழிலாளர்கள் என வஞ்சித்து வரும் போக்கினை கைவிட்டு ஊதியத்தை உயர்த்தி சிறப்பு டைம்ஸ் ஸ்கேல் ஊதியம் வழங்கிட வேண்டும் ஏழாம் நம்பர் ஒன்றாம் நம்பர் வங்கி கணக்கு என பாகுபாடு காட்டி சலுகையை பறிக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது