உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலணியில் உள்ள மகளிர் பூங்காவில் மரம் நடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மரம் நடும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மேயர் ஜெகன் இடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சில கோரிக்கைகளை வைத்தனர் மகளிர் பூங்காவில் மின்விளக்குகள் எரியவில்லை இரவு 9 மணி வரை பூங்கா செயல்பட அனுமதிக்க வேண்டும் குடி தண்ணீர் வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக மேயர் ஜெகன் இனிமேல் இரவு 9 மணி வரை பூங்கா செயல்படும் சில தினங்களில் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அமைக்கப்படும் மின்விளக்குகள் உடனடியாக எரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களிடம் மேயர் ஜெகன் கூறினார்.
மரம் நடும் நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய ஆணையர் பிரியங்கா பேசுகையில் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது முன்பெல்லாம் அதிக மரம் இருந்தது தற்போது மரங்கள் குறைவாக உள்ளது பொதுமக்கள் இந்த நாளை நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் இங்கு வழக்கப்படுகின்ற மரங்களை ஒவ்வொருவரும் இந்த மரங்களை நான் வளர்க்கிறேன் என்று பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் பிளாஸ்டிக்கை எரிப்பதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது வக்கீல் ஓடையை சுற்றி குப்பைகள் முழுவதும் தேங்கி கிடக்கிறது
பொதுமக்கள் போடுகின்றனர் அது கடலுக்கு செல்கிறது அது ஒரு பெரிய சவாலாக உள்ளது மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே இந்த பிளாஸ்டிக் தான் பிளாஸ்டிக்கை நாம் அறவே தவிர்க்க வேண்டும் நாம் காய்கறி கறிகள் வாங்க செல்லும்போது முன்பெல்லாம் னப. பாத்திரம் கொண்டு செல்வோம் பழைய மாதிரி நாம் எல்லாமே பயன்படுத்த வேண்டும். 2026 திடக்கழிவு மேலாண்மையில் நான்கு வகையான கழிவுகள் பிரித்து வழங்க வேண்டும்
வீட்டில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை பிரித்துக் கொடுத்தால் அதனை முழுவதும் சரி செய்வதற்கு மாநகராட்சி பணியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சுற்றுச்சூழல் முழுமையாக பாதுகாக்க முடியும் அடுத்த தலைமுறைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆணையர் பிரியங்கா பேசினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் மரக்கன்றுகளை நட்டு விட்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் இந்த மகளிர் பூங்கா அமைக்கப்பட்ட இடம் முன்பு எப்படி இருந்தது என்று தெரியும் நான்கு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடி எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது என்று பொதுமக்கள் நன்கு அறிவீர்கள் முன்னாள் முதலமைச்சர் எனக்கு கொடுத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறேன் தருவை குளத்தில் உள்ள உரக்கடங்கில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது மாநகர பகுதியில் 20000 மரக்கன்றுகள் பொதுமக்கள் கேட்ட இடங்களில் வீடுகளுக்கு முன்பு நடப்பட்டுள்ளது
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மழை பெய்தாலும் வெயில் அதிகமாக உள்ளது அதற்கு மரங்களை தான் அதிகமாக வளர்க்க வேண்டும் தருவைகுளம் உரக்கடங்கில் மரம் வளர்ப்பது ஒரு சவாலாக இருந்தது அங்கு மரம் வைத்தால் வளராது என்று சொன்னார்கள் மீறி தான் வளர்த்தோம் தற்போது நல்ல முறையில் அங்கு வழங்கப்பட்டுள்ளது
இதனைத் தான் கோயமுத்தூர் மாநகராட்சி பின்பற்றி வருகிறது அதற்கு தூத்துக்குடி மாநகராட்சி முன்னுதாரணமாகவே உள்ளது 20% கேரிப்பை இன்னும் தூத்துக்குடியில் பயன்படுத்தி மக்கள் வருகின்றன ர் குறிப்பாக மீன் மார்க்கெட் பூ மார்க்கெட் காய்கறி மார்க்கெட் சிறிய பெட்டிக்கடைகளில் கேரி பை பயன்படுத்தப்பட்டு வருகிறது
பொது மக்களாகிய நீங்கள் தான் கேரி னப வாங்க மாட்டோம் என்று கூற வேண்டும் பக்கீல் ஓடை ஏழு கிலோமீட்டர் உள்ளது அதை தற்போது சுத்தம் செய்தால் 50 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்க முடியும் எல்லா வகையிலுமே மாநகராட்சி முன்னுதாரணமாகவே உள்ளது பறவைகளை பாதுகாக்க வேண்டும் கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று இடத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தருவைகுளம் உரக்கடங்கில் இந்த ஆண்டு நான்கு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதுபோல தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 53 பூங்காக்கள் தற்போது நடைமுறையில் உள்ளது 206 பூங்காக்கள் இருந்தாலும் 53 பூங்காக்கள் தற்போது நடைமுறையில் உள்ளது மகளிர் பூங்கா தூத்துக்குடி மாநகரில் மூன்று உள்ளது
100 சதவீதம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தினசரி வீட்டுக்கு வீடு வந்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர் அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இந்த சுற்றுச்சூழல் தினத்தில் கேரிபை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் அதுபோல மரக்கன்றுகளை நடுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்
ஒரு உதாரணம் கூறுகிறேன் நான் குடியிருக்கும் பகுதியில் நூறு மரக்கன்றுகளை 20 வருடங்களுக்கு முன்பு நட்டு வைத்தேன் தற்போது அது மரமாக வளர்ந்து பல்வேறு நபர்களுக்கு பயன் அளித்து வருகிறது அதுபோல நீங்களும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பேசினார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கும் ஆணையர் பிரியங்கா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்
இந்தப் பகுதியில் நாங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வந்தாலும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருந்தது மழைக்காலங்களில் ஆறு மாதத்திற்கு மழை நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு மழைக்காலத்தில் இந்தப் பகுதியில் மழை முழுவதும் தேங்கவில்லை அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளதுஇது புறநகர் பகுதியாக இருந்ததால் யாரும் கண்டு கொள்ளவில்லை ஆனால் எங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டு இங்கு மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது அதற்கு மேயர் ஜெகனுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.