​கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா சிறந்த ஓவியக் கலைஞர் மட்டுமல்லாமல், ஒரு பன்முகத் திறமை கொண்ட சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு வெளியான ‘பொண்ணு’ என்ற குறும்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சமூக அக்கறை கொண்ட இக்குறும்படத்தின் சிறந்த கதைக்களம் மற்றும் நேர்த்தியான நடிப்பிற்காக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும் புகழ்பெற்ற ‘CHAPLER AWARD – BEST NONO MOVIE’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஓவியத் துறையில் ஏற்கனவே முத்திரை பதித்த யு.எம்.டி.ராஜா, தற்போது நடிப்புத் துறையிலும் தடம் பதித்து இந்த சர்வதேச விருதினைப் பெற்றுள்ளதற்கு சமூக ஆர்வலர்களும் கோவை பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *