தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல்.
குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் செயல்பட்டு வருகிறது தொடர்ந்து அங்கு கிராவல் மண் திருடப்பட்டு கடந்த 20 நாட்களில்12 வண்டிகள் குண்டடம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் வருவாய் துறை இருக்கு உட்பட்டு பத்துக்கும் மேற்பட்ட கிராம அதிகாரிகள் வருவாய் துறை இன்ஸ்பெக்டர் RI அலுவலகம் செயல்பட்டு வருகிறது
இருந்தும் அப்பகுதியில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெற்று வருகிறது மேலும் இரவு முழுவதும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் கிராவல் மண் தேடப்பட்டு வருகிறது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் மண் திருட்டு நடைபெறுகிறது வருகிறது.
இதற்கு அப்பொழுதில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் மேலும் குண்டடம் காவல் துறையினர் லாரிகளைப் பிடித்து அப்பப்போது தப்பாக விடுவதால் இது போன்ற லாரி பிடிக்கும் சம்பவம் லாரிகள் மண் திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
நேற்று இரண்டு லாரிகள் ஒரு ஜேசிபி பிடித்து பறிமுதல் செய்து வழக்கு தொடுத்துள்ளனர் மேலும் அப்பகுதியில் உள்ள எரகாம்பட்டி குழந்தை பாளையம் கணபதிபாளையம் ருத்ராவதி மற்றும் கொடுவாய் பகுதிகளில் மண் அதிகளவு கடத்தப்படுகின்றனர்
இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அந்த இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தால் எவ்வளவு மண் திருட்டு நடைபெற்றது என்பதை புதிய அரசு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து குண்டடம் காவல் நிலையத்தில் சிங்காரிபாளையம் குண்டடத்தைச் சேர்ந்த 1.ஜெயக்குமார் 24 அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் 2.செல்வகுமார் பராமரிப்பது நில உரிமையாளர் கர்ணா மூர்த்தி உள்ளிட்ட மூவரையும் குண்டடம் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் தொடர் கனிமவள கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.