குறிஞ்சிப்பாடி வட்டம்
வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்
இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில் சென்னை சாலை ரயில்வே கேட் அருகே உள்ளபாலாஜி நகரில் இயங்கிவந்த அரசு மதுபான கடை (டாஸ்மாக் கடை No.2660) இதனால் சாலைகள் விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது
மேலும் இந்த பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர்கள் மதுபிரியர்களால் பெரும் தொல்லைகளுக்கு ஆளானார்கள், இதனை தொடர்ந்து, தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார் அனுப்பப்பட்டது போராட்டங்களும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்றவுடன் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, கோவில் அருகே உள்ள மதுகடைகள் அகற்றப்படும் என ஒரு உத்திரவில் கூறப்பட்டது.
இதனையொட்டி நேற்று (மே14ந்தேதி) முதல் தமிழக அரசின் உத்தரவால்வடலூர் ரயில்வே கேட் அருகே இருந்த அரசுமதுபான நிரந்தரமாக மூடப்படுகிறது