கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா, யக்னசி, பிரதிக்ஷரா,மோனிகா, தன்யஸ்ரீ, சம்யுக்தா,ஆகிய மாணவ, மாணவிகளின் பரதநாட்டியத்தை முன்னிட்டு அவர்களுக்கு முறைப்படி சலங்கை அணிவிக்கப்பட்டது

நடன நிகழ்ச்சிக்கு விஜயமாலதியின் நட்டு வாங்கம் , திருகண்ணபுரம் சங்கரின் வாய்ப்பாட்டு, அய்யம்பேட்டை செந்திலின் மிருதங்கம், ரவியின் புல்லாங்குழல் ,
சரவணன் வயலின் ஆகியவற்றுக்குபரத நாட்டிய மாணவ, மாணவிகள் புஷ்பாஞ்சலிநடனம்,தாண்டவகணபதிநடனம்,,தேவாரம் நடனம்,
கலியுகவரதன் நடனம் உள்ளிட்ட நடனங்கள் ஆடினர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,தலைமை ஆசிரியர் லதா அம்பலவாணன்,ஜெயங்கொண்டம்
மாடர்ன் கல்வி நிறுவனங்களின் குழுமம், துணைத் தலைவர் சுரேஷ்,
கும்பகோணம்,நிர்மல் துணை மருத்துவ நிறுவனம், தலைவர் மைதிலி முத்துவேல்,சோழன் மாளிகை, ,ஜி எஸ் கே மெமோரியல் ஸ்கூல் தலைமை ஆசிரியர் அனுஷா,டி பழூர்,எஸ் ஆர் ஜி எம் எல் பள்ளி,கரெஸ்பாண்டெண்ட் செந்தில்குமார்,சன்னநல்லூர்,ஜெய் ஸ்ரீ வாமலயா, நிறுவனர் ராமராஜ்
ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விருது மற்றும் டாலர் வழங்கினார்கள்.
முன்னதாக ஸ்டார் குரூப்ஸ் மாட்டின் வரவேற்றார். நிறைவில் அபிநயாஸ் அக்கறைக் குழு நிறுவனர் நரேஷ் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *