நாகப்பட்டினம்,மே.15-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவை சேர்ந்தவர் அஞ்சான் மகன் அஜித்குமார் (வயது 32). இவர் தமிழக ஊர் காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.
மேலும் சியாத்தமங்கை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வெல்டராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வெல்டிங் வேலை செய்ய வெல்டிங் மிஷின் வயரில் மின் இணைப்பு கொடுப்பதற்காக சுவிட்ச் போர்டில் பொருத்தியபோது திடீரென மின்சாரம் அஜித் மீது பாய்ந்துள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.