திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி
தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து காவல்துறையினர் புதிய பதிவேடு நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். ஆம் வரிசையில் இல்லாமல் தனி வழியில் செல்லும் பக்தர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்லும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோயில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்களும் உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் சிரமம் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
.