திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது அதன் நிறைவாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது . உற்சவர் அம்மனை கோவிலின் பிரகாரத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருள செய்திருந்தனர் .

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கை ஏற்றி வைத்து குத்துவிளக்கினை அம்மனாக பாவித்து குங்குமத்தை கொண்டு நாடு வளம் பெற வேண்டியும் , குடும்பம் செழித்து விளங்கிட வேண்டியும் பூஜை செய்தனர் .

பூஜை முடிவில் தீபாராதனை காட்டப்பட்டது சுமங்கலி பெண்கள் தீப ஆரத்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர் . இறுதியாக மூலவர் காத்தாயி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *