நாகப்பட்டினம்,
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒருவேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம் திருமருகல் ஒன்றியம் சார்பாக திருமருகலில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிர படுத்திவருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் நிலையில் உலக பட்டினி தினத்தை யொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி தனது ரசிகர்களுக்கு அன்புகட்டளை இட்டிருந்தார்.


அதன்படி திருமருகலில் ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, தனசேகர், ஒன்றிய இணை செயலாளர் அன்பரசன் ஆகியோர் இணைந்து வழங்கிய அன்னதானத்தை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பெற்று சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *