கடலூர் மாவட்டம் வடலூர் ஈத், கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது
வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையிலான இஸ்லாமியர்கள் உலக அமைதி வேண்டி பேரணியாக சென்றனர்
தொடர்ந்து வடலூர் ஐய்ய ஏரி பின்புறம் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.


தொடர்ந்து ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்
இறுதியில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு வடலூர் ஜமாத் சார்பில் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.


பின்னர் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் இந்நாளில் ஒழுக்கத்தையும் மாண்பையும் கடைப்பிடிக்கும் வண்ணம் இளைஞர்கள் இறை நம்பிக்கையோடு மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீர்கேட்டை தடுக்க பள்ளி கல்லூரிகளில் நீதி போதனை மனதத்துவ வகுப்புகள் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்
நிகழ்வில் சையது அப்தஹிர் , ஜமால் மொய்தீன், பஷீர் அகமது கேப்டன் ஜாகிர் உசேன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *